பந்த் மீது நம்பிக்கை கொண்டோம்…..ஆனால் பந்த் அவுட்…..ஆட்டத்தையே மாற்றியது…!!விராட்..!

Default Image

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. போட்டியின் நடுவே மழை குறுக்கீட்டதால் ஆட்டம் தடைபட்டது.இதனால் இந்தியாவிற்கு 17 ஓவரில் 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Image result for india vs australia

வெற்றி இலக்கோடு களமிரங்கிய இந்திய தொடக்க பேட்ஸ்மேன் தவான் 42 பந்தில் 76 ரன்கள் குவித்த போதிலும் ரோகித் சர்மா (7), லோகேஷ் ராகுல் (13), விராட் கோலி (3) ஆகியோர் மிள்ர்க்க தவறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் ரன்குவிப்பு கடுமையாக ஸ்தம்பித்தது.இதன் பின் ரிஷப் பந்த் – தினேஷ் கார்த்திக் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது என்றே சொல்லலாம்.

Image result for india vs australia

போட்டிய் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது  வெற்றிக்கு 10 பந்தில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிஷப் பந்த் ரிவர்ஸ் சற்றும் எதிர்பார்க்காமல் ஸ்விப் மூலம் ஆட்டமிழந்தார். இதுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.இந்த பிரிஸ்பேன் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் இது மிகவும் நெருக்கமாக வந்து தோற்ற ஒரு போட்டி. மேலும் இழுபறியாக சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும் மற்றும் வீரர்களுக்கும் மிகவும் சிறப்பாகவே இருந்திருக்கும் இதில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருப்பார்கள்.

Related image

அணியில் நாங்கள் சிறப்பான வகையில் பேட்டிங்கை தொடங்கினோம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொதப்பியதால் ரன் குவிக்க முடியவில்லை. இறுதியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருக்கும்போது வெற்றி பெற முடியும் என்று தான் நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததுமே மீண்டும் பின்தங்கிவிட்டோம்.மேலும் தொடக்க பேட்ஸ்மேன்களில் தவான் மிகவும் ஸ்டிராங்கான வீரர் அவர் இதுவரை டி20 போட்டிகளில் சதம் அடிக்காவில்லை. என்றாலும் அவரது ஆட்டம் அணிக்கு பலன் தருவதாக இருக்கும்  என்று கூறினார்.

DNASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்