என்னை எதிர்க்கட்சியினர் கொல்ல பார்க்கிறார்கள்..!கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை தாக்கப்பட்டுள்ளேன் …!டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு தகவல்
என்னை எதிர்க்கட்சியினர் கொல்ல பார்க்கிறார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவு வழக்கம் போல சாப்பிட சென்றார்.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சாப்பிட சென்றதும் அவர் மீது மிளகாய்ப் பொடி தாக்குதல் நடைபெற்றுள்ளது .பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய அனில் குமார் ஹிந்துஸ்தானி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதன் பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி கைதான அனில் என்பவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், என்னை எதிர்க்கட்சியினர் கொல்ல பார்க்கிறார்கள்.அதேபோல் கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை தாக்கப்பட்டுள்ளேன் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.