புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உதவ புதிய யோசனை கூறும் சிம்பு!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இருந்தும் இன்னும் பலர் உதவிகள் கிடைக்காமல் தவித்தது வருகின்றனர். வீடுகள் இழந்து, உடைமைகள் இழந்து, உணவின்றி உணவுக்காக மறியல் செய்யும் அவல நிலையும் சில இடங்களில் நடந்ததாக கேள்விப்பட்டிருப்போம். அதனை கண்டு இன்னும் நிறைய தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் தன்னால் முடிந்த உதவிகளை நிதிஉதவி ஆகவும், பொருளுதவியாகவும் கொடுத்து வருகின்றனர். நடிகர் சிம்புவும் தனது பங்கிற்கு உதவிகளை செய்துள்ளார். அவர் தற்போது ஓர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சாமானிய மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய யோசனை கூறியுள்ளார். அதில் அணைத்து செல்போன் நிறுவனங்களும் ஒன்றிணைந்து, தங்களது வாடிக்கையாளர்களிடம் குறைந்தது 10 ரூபாயாகவும் இருந்தாலும் அதனை நிதிஉதவிக்காக செலுத்தி பின்னர் இவர்கள் எல்லாரும் நிதி கொடுத்துள்ளனர் என ஒரு அறிக்கை வெளியிட்டால் அனைவருக்கும் தாங்கள் செய்யும் உதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றுள்ளது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகும் என தெரிவித்துள்ளார்.
A nice thought and initiative by STR hope it all works out well #SaveDelta #uniteforhumanity #unitefordelta #STR pic.twitter.com/SFYsusYZs6
— Raja yuvan (@thisisysr) November 21, 2018