கடந்தாண்டை விட தங்கம் இறக்குமதி 16 % சரிவு
புதுதில்லி : தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்த வருடம் அக்டோபர் வரை 16 சதவீதம் குறைந்துள்ளது. முந்திய ஆண்டில் 350 கோடி டாலராக இருந்தது, இந்தாண்டு 294 கோடி டாலராக குறைந்து உள்ளது.
கடந்தாண்டு பண்டிகை காலமான தசரா, தீபாவளி போன்றவை தங்கவிற்பனைக்கு கைகொடுக்கும். ஆனால் இந்தாண்டு அக்டோபரில் சில பண்டிகைகள் அக்டோபரிலும் சில நவம்பரிலும் உள்ளதால் இந்தாண்டு மாதாந்திர அளவில் விற்பனை குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.