டெல்டா பகுதி மக்களுக்கு உதவ சினிமா பிரபலங்கள் அழைப்பு…..!!

Default Image

கஜா புயலால் தஞ்சை , திருவாரூர் , நாகப்பட்டினம் , புதுக்கோட்டை என டெல்ட்டா மாவட்ட பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு செய்வதறியாது மக்கள் வேதனையுடன் இருக்கின்றனர். இதனால் பல்வேறு மக்கள் , சமூக ஆர்வலர்கள் , சினிமா பிரபலங்கள் என டெல்ட்டா பகுதி மக்களுக்கு பல்வேறு தரப்பினர் பொருட்கள் வழங்கியும் , நிதியுதவி வழங்கியும் வருகின்றனர்.

இந்நிலையில் சினிமா பிரபலங்களான டெல்லி கணேஷ் மற்றும் ரமேஷ் கண்ணா இது தொடர்பாக வீடியோ மூலமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/ZQIqgG5flNo

இந்நிலையில் சினிமா பிரபலம் டெல்லி கணேஷ் வீடியோ மூலமாக டெல்டா பகுதி மக்களுக்கு அனைவரும் சேர்ந்து உதவ வேண்டுமென்றும் , டெல்டா பகுதி மக்களுக்கு உதவி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.ATKVA பக்கத்துடன் இணைத்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.

https://youtu.be/yzd4xlztsFI

இதேபோல்  சினிமா பிரபலம் ரமேஷ் கண்ணா  வீடியோ மூலமாக டெல்டா பகுதி மக்களுக்கு உதவ வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்.அவர் கூறிய வீடியோ மூலம் தெரிவித்ததாவது , கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு அதிகமானோர் உதவி செய்கிறார்கள் , நிதி உதவியும் அளிக்கிறார்கள்.இங்கே வர்தா புயல் வந்த போது நேரடியாக இங்கே வந்து உதவி செய்தார்கள்.தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.இதுவரை பலரும் உதவி செய்கிறார்கள் , மக்கள் இதுவரை செய்யும் உதவியும் , உடல் உழைப்பும் போதுமானதாக இல்லை.உதவி செய்ய ஏராளமான ஆட்கள் தேவைப்படுகிறது வாருங்கள்.ATKVA பக்கத்துடன் இணைத்து செயல்படுவோம் என்று நடிகர் ரமேஷ் ரமேஷ் கண்ணா  அழைப்பு விடுத்துள்ளார்.

dinasuvadu.com 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்