மரவள்ளி கிழங்கின் மருத்துவ குணங்கள்….!!!
மரவள்ளிக்கிழங்கு என்பது கிழங்கு வகைகளை சேர்ந்தது. இது வறண்ட நிலப்பகுதிகளில் விளைய கூடிய கிழங்கு ஆகும்.இந்த கிழங்கில் மருத்துவகுணங்கள் அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் தான் இந்த கிழங்குகள் அதிகமாக விளைகிறது.
சத்துக்கள் :
மரவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் உள்ளது.
மரவள்ளிக் கிழங்கில் தயாரிக்கப்படும் பொருட்கள் :
மரவள்ளிக்கிழங்கில் ஜவ்வரிசி,மரவள்ளிக்கிழங்கு மாவு போன்றவை தயாரிக்கப்படுகிறது. மேலும், மரவள்ளிக்கிழங்கு மாவில் திரவ நிலை குளுக்கோஸ் மற்றும் டெக்ரோஸ் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
பயன்கள் :
- இந்த கிழங்கில் அதிக அளவு மாவுசத்து உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
- கருவில் உள்ள குழந்தைகளின் ஊனத்தை குணமாக்க இது உதவுகிறது.
- எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
- ஞாபகசக்தியை அதிகரிக்க செய்கிறது.
- இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
- ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
- இரத்தில் உள்ள நச்சு கொழுப்புகளை தவிர்க்கிறது.