3 பேர் விடுதலை….!ஆளுநர் மாளிகையின் விளக்கம் கொலையை விட கொடுமையானது…!வைகோ ஆவேசம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அக்கறை காட்ட தமிழக அரசு மறுக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், 3 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல. ஆளுநர் மாளிகையின் விளக்கம் கொலையை விட கொடுமையானது.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அக்கறை காட்ட தமிழக அரசு மறுக்கிறது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.