கஜா புயல் நிவாரண நிதி…!நடிகர் விக்ரம் ரூ 25 லட்சம் நிதியுதவி …!
கஜா புயல் நிவாரண நிதியாக, முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ 25 லட்சம் வழங்கினார்.
கஜா புயலினால் டெல்டா பகுதி மக்கள் முன்பில்லாதா அளவிற்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீரும் கிடைக்காமல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
திரைத்துறையை சேர்ந்த சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் கூட தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.20 லட்சத்தை (10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நீதிக்காகவும், 10 லட்சம் நிவாரண பொருட்களாகவும் ) புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவியாக அளித்தார்.அதேபோல் இயக்குநர் ஷங்கர் கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் வழங்கினார்.
இந்நிலையில் கஜா புயல் நிவாரண நிதியாக, முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ 25 லட்சம் வழங்கினார்.