அரசியல் ஆதாயத்திற்காகவே தமிழக அரசை டிடிவி.தினகரன் விமர்சிக்கிறார்….உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு…!!
அரசியல் ஆதாயத்திற்காகவே, டிடிவி தினகரன் தமிழக அரசை விமர்சித்து வருவதாக,உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மத்தியிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், புயலால் பாதிக்கப்பட்ட திருவாருர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
dinasuvadu.com