இன்று மாலை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!!
கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் நேரில் விளக்கி கூறி, தமிழகத்திற்கு உரிய நிதியை பெறுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இந்தநிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி கூறி தமிழகத்திற்கான உரிய நிதியை பெறுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர், நாளை காலை பிரதமரை சந்தித்து பேசுகிறார். டெல்லி புறப்படுவதற்கு முன்னதாக இன்று காலை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
dinasuvadu.com