கூட்டுறவு வங்கிகள் ஏழைகளின் வங்கியாக மாற்றம் -தமிழக அரசுக்கு பாராட்டு…!!
கூட்டுறவு வங்கிகளை அனைத்து ஏழைகளின் வங்கியாக மாற்றியது தமிழக அரசு என டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கூட்டுறவு துறை சார்பில் நடைபெற்ற 65-வது கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி, ஏழைகளின் பயன்பாட்டை தீர்க்கும் விதமாக தலைவர்களை உருவாக்கி , கூட்டுறவு வங்கிகளை ஏழைகளின் வங்கியாக உருவாக்கியது தமிழக அரசு என புகழ்ந்துள்ளார்.இவ்விழாவையொட்டி மாணவ , மாணவிகளுக்கு நடத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
dinasuvadu.com