புயலால் சேதமடைந்த ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை…!பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்
புயலால் சேதமடைந்த ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, கஜா புயலால் சேதமடைந்த ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.