கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டது …! தினகரன்
கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன்.அதன் பின்னர் அவர் கூறுகையில், டெல்டாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளதால் அறிவித்ததை விட மூன்று மடங்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டது என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.