பொது இடங்களில் புகை பிடிக்க தடை…அசத்தும் கர்நாடக அரசு….!!

Default Image

கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதி போன்ற இடங்களிலும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கேளிக்கை விடுதிகளுக்கு மாநில அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விடுதிகளில் புகைப்பிடிக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் 18 வயது நிரம்பாதவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்