ஜம்முவில் தொடரும் பனிப்பொழிவு..சாலைகளில் வாகனம் முடக்கம்…!!
ஜம்மு காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவு காரணமாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜம்மூ காஷ்மீரில் மலைகள்,மரங்கள் மற்றும் வீடுகள் என அனைத்தும் பனியால் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்பனிப்பொழிவால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பூஞ்ச் மற்றும் சோபியான் மாவட்டங்களை இணைக்கும் மொகுல் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டுள்ளது.தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், ஒரு வழிச்சாலையாக பயன்படுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
dinasuvadu.com