பீர் பாட்டிலுடன் விஷால்…ராமதாஸ் கண்டனம்…!!
விஷாலின் அயோக்யா திரைப்படத்தின் போஸ்டருக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஷால் நடிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் அயோக்யா திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் விஷால் தனது கையில் பீர் பாட்டில் ஒன்றை பிடித்திருப்பது போல் உள்ளது .இதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்து ,தனது டுவிட்டர் பக்கத்தில் ,பீர் பாட்டிலுடன் தோன்றும் விளம்பரமும் ,சுவரொட்டியும் உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் இதன் மூலம் விஷால் தனது ரசிகர்களுக்கு என்ன சொல்ல வருகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.நடிகர் சங்க செயலாளரிடமிருந்து சமூக அக்கரையை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com