கஜா புயல் பாதிப்பு …!தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிய மனு …!பிற்பகல் விசாரணை

Default Image

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

 

இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் கடந்த 2 தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு தத்தளித்து வரும் மக்கள் கடும் கோபத்தை ஆட்சியளர்கள் மத்தியில் வெளிகாட்டி வருகின்றனர்.

 

மேலும் அடிப்படைவசதியின்றி சிரமப்படுவதாக புலம்புகின்றனர்.இந்நிலையில் புயலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது.

இந்நிலையில்  தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.அவசர வழக்காக விசாரிக்க கோரி வழக்கறிஞர் அழகுமணி முறையீடு செய்தார்.மேலும் உயிரிழப்புக்கு ரூ.25 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்க கோரி முறையீடு செய்தார்.   மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்