புதுக்கோட்டையில் கடும் சேதம்…! நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்…!முதலமைச்சர் பழனிசாமி
புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குளத்தில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் பழனிசாமி.அதன் பின்னர் அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது.அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது .புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரை சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டுள்ளோம், நாளை மாலை நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு முழு அறிக்கை அனுப்பி, உரிய நிதி பெறப்படும்.அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போது தான் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெறும்.கேரள வெள்ளத்தின் போது எதிர்க்கட்சிகள் செயல்பட்டது போல், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படவில்லை .அனைவரும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும், கட்சி பாகுபாடின்றி பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.