கஜா புயல் பாதிப்பு குறித்து ஹெலிகாப்டரில் நாளை பறந்து பார்வையிடுகிறார் முதல்வர்..!!!
தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் கடந்த 2 தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு தத்தளித்து வரும் மக்கள் கடும் கோபத்தை ஆட்சியளர்கள் மத்தியில் வெளிகாட்டி வருகின்றனர்.
மேலும் அடிப்படைவசதியின்றி சிரமப்படுவதாக புலம்புகின்றனர்.இந்நிலையில் புயலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது.இந்நிலையில் கஜா புயல் சேத பகுதிகளை நாளை ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் பழனிசாமி பார்வையிடுகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
DINASUVADU