ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டவிஷாலின் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை ரிலீஸ் தகவலுடன் இதோ!!
இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படஙக்ளை தொடர்ந்து நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம்.C.S இசையமைக்க உள்ளார்.
இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் ராசிக்கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தினை அடுத்த வருடம் ஜனவரியில் திரைக்கு வரும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
source : cinebar.in