நான் உங்களோடு நிற்பேன்…ஹர்பஜன் சிங் ட்வீட்…!!
கஜா புயல் தாக்கத்தால் நிற்கும் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்த்து முடிந்த உதவியை செய்து துணை நிற்பேன் தமிழகமே.” என ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கஜா புயல் பாதிப்பை போர்க்கால அடிப்படையில் சீர்செய்து வருகின்றனர்.புயலால் கடுமையாகப் பாதிக்கப்படட் டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.’கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவ முன் வாருங்கள் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.ஹர்பஜன் சிங் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா முழுவதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது. கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படைத் தேவையைத் தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோப்போம்.முடிந்ததைச் செய்வோம். உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே என்று அவர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
dinasuvadu.com