கஜா புயலால் மின் துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது..!அமைச்சர் தங்கமணி
கஜா புயலால் மின் துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், நிவாரணப் பணிக்கு கூடுதலாக ஆந்திராவில் இருந்து 1000 பணியாளர்கள் இன்று வருகின்றனர்.புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக 3 நாட்களில் மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.கஜா புயலால் மின் துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. நகர் புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களுக்கு மின் இணைப்பு தர விரைவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.