டப்பிங்க்கிலிருந்து டப்புனு நீக்கிய சங்கம்…..கடைசி படத்தோடு கழட்டி விடப்பட்ட பாடகி..!!

Default Image

பிரபல பின்னணிப் பாடகி மற்றும் பின்னணிக் குரல் ஆர்ட்டிஸ்ட் ஆக உள்ளவர் சின்மயி. பாடகி டப்பிங்குமா என்றால் ஆமாம் டப்பிங்க் செய்வர் குறிப்பிட்டு சொன்னால் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த படம் 96

Image result for டப்பிங்

இந்த படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் சின்மயி.மேலும் படத்தில் நடிகை த்ரிஷா பாடும் பாடல்கள் அனைத்தும் இவரே பாடியிருந்தார். இந்நிலையில் தற்போது டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தெரிவித்த சின்மயி தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்த தன்னை தற்போது யூனியனிலிருந்து நீக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

Image result for டப்பிங் சின்மயி 96

தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் உள்ள சின்மயி, இதுகுறித்து ட்வீட்டரில் தெரிவித்துள்ளார் அதில் நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை என்று காரணம் சொல்லப்பட்டு டப்பிங் யூனியனில் எனது உறுப்பினர் என்ற உறுப்பினர் இல்லை என்று நீக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் இல்லாத ஒருவர் தமிழில் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது.ரத்து செய்தது எதற்கு என்றால் நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என்று எனது மெம்பர்ஷிப் ரத்து செய்து உள்ளனர்.ஆனால் ரத்து செய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத் தான் எனக்கு தெரிகிறது.

Related image

சரி நான் நிர்ணயிக்கப்பட்ட அந்தத் தொகையைக் கட்டினாலும், எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்த இரண்டு வருடத்தில் எனது சம்பள பணத்தில் 10 சதவிகிதத் தொகையை யூனியன் எடுக்கத் தவறியதே இல்லை. தமிழில்  ’96 தான்  எனது கடைசிப் படமாக இருக்கப்போகிறது.மேலும் டப்பிங் யூனியனின் இந்த நீக்கம் தொடர்ந்தால் ஒரு நல்ல படத்துடன் தமிழில் எனது டப்பிங் பயணத்தை முடித்த கொண்டது மகிழ்ச்சியே. பை! பை!” என்று உருக்கமாகக்  தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சின்மயி

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்