“தீர்ப்புகள் விற்கப்படும் “படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட திருமுருகன் காந்தி…!!!
“தீர்ப்புகள் விற்கப்படும் “பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் திருமுருகன் காந்தி
நடிகர் சத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார்.
நடிகர் சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர்.இந்த படத்தை தீரன் இயக்குகிறார். படத்துக்கு ‘கருட வேகா’ என்ற தெலுங்குப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் எஸ்.என்.பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். சரத் என்பவர் எடிட் செய்கிறார் என்று தகவகள் தெரிவிக்கின்றன.
படம் முழுக்க உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது .மேலும் சமூக விஷயங்களை அப்படியே உள்ளடக்கிய தரமான ஒரு பொழுதுபோக்குப் படம் மற்றும் இத்தைய படத்தை வழங்குவது எங்கள் நோக்கம் படத்தில் ஆக்ஷன் த்ரில்லர் மூலம் பற்றி தெரியவரும். மேலும் படம் ரசிகர்களை இருக்கையில் அதன் நுனியில் வைத்திருக்கும் என்று முழுவதுமாக நாங்கள் நம்புகிறோம்.
படத்தை பற்றி கூறும் இயக்குநர் படத்தில் கதாநாயகன் ஒரு சமூக நீதியின் போர்வீரன்.நடிகர் சத்யராஜ் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் தான் ஒரே தேர்வாக அவர் இருந்தார்.மேலும் நான் அவரது எளிமை முயற்சிகளால் ஈர்க்கப்பட்டேன் என்று கூறுகிறார் இயக்குநர் தீரன்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி வெளியிட்டார்.படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அதாவது டிசம்பரில் தொடங்க உள்ளது.
படத்தின் டைட்டிலே “தீர்ப்புகள் விற்கப்படும்” என்று வைத்துள்ளது படக்குழு படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக சினி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU