சென்னைக்கு ரயிலில் வந்த 1,000 கிலோ நாய்க்கறி …!அதிகாரிகள் பறிமுதல் …!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பார்சலில் வந்த 1,000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் உணவுப் பதுகாப்பு அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் 1,000 கிலோ நாய்க்கறியை பறிமுதல் செய்துள்ளனர்.1000 கிலோவுக்கு அதிகமான கெட்டுப்போன நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்ய அவை ரயிலில் கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.சென்னையில் எந்தெந்த உணவகத்துக்கு இந்த சப்ளை நடைபெற்ற வருகிறது என்பதை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.