திருச்செந்தூர் கோவிலில் நகைபறிப்பில் ஈடுபட்ட பெண்கள் கைது….!!!
திருச்செந்தூர் கோவில் திருவிழாவில் நகை திருட்டில் ஈடுபட்ட சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் திருவிழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நான்கு பெண்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இவர்கள் நான்கு பெரும் சகோதரிகள் என தெரிய வந்தது.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற விழாவில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஒரு பெண்ணிடம் 41/2 பவுன் நகையை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 4 போரையும் போலீசார் கைதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.