சென்னையில் பல பகுதிகளில் மழை…!
கஜா புயல் ஓய்ந்த நிலையில் சென்னை பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
தமிழகத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கி கரையை கடந்த கஜா போகும் பொழுது தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை புறநகர் பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், போரூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது.ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.