கொடைக்கானலில் மண் சரிவு 4 பேர் பலி…!!
கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண் சரிவில் சிக்கி 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஜா புயல் காரணமாக நேற்று கொடைக்கானல் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் கன மழை பெய்தது. மழை வெளுத்து வாங்கியதால், சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சின்னப்பள்ளம் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவில் ரவி, சுந்தரராஜன், ராஜேந்திரன், கார்த்திக் ஆகிய 4 தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளி வந்துள்ளது. ஒருவர் உடல் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் சேலத்தைச்சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளன. மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீ அணைப்பு படையினர், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சின்னப்பள்ளம் செல்லும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com