முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எனது பாராட்டுக்கள் ..! தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எனது பாராட்டுக்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,கொசுக்கள் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் மக்களுக்கு இலவசமாக கொசுவலை வழங்க வேண்டும். கஜா புயலுக்கு மத்தியில் அரசியல் புயலை யாரும் கிளப்ப வேண்டாம். என்ன உதவி வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதல்வரிடம் கேட்டுள்ளார். கஜா புயல் அறிவிப்பு வந்த உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.