கொச்சி விமான நிலையத்தில் போராட்டம்….திருப்தி தேசாய் புனே திரும்புகிறார்…!!
கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேறவிடாமல் பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் திருப்தி தேசாய் புனே திரும்ப திட்டமிட்டுள்ளார்.
மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் இன்று திறக்கப்பட்டது. கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில் பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே பிரவேசிக்க முடியாத வகையில் போராட்டக்குழுவினர் குவிந்தனர்.திருப்தி தேசாய் பேசுகையில், “எங்களுக்கு உதவி செய்யக்கூடாது என டாக்சி டிரைவர்களை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு இடம் வழங்கினால் ஓட்டல்களை அடித்து நொறுக்குவோம் என மிரட்டப்பட்டுள்ளது. எங்களுக்கு தொல்லைக் கொடுக்கும் மற்றும் மிரட்டும் மக்கள் தங்களை அய்யப்ப பக்தர்கள் என்று சொல்லிக்கொள்வதை பார்ப்பது என்னை கவலையடைய செய்துள்ளது,” என கூறியுள்ளார்.
dinasuvadu.com