கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே அரசு திட்டமிட்டு பணியாற்றியது ..! முதலமைச்சர் பழனிசாமி
கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே அரசு திட்டமிட்டு பணியாற்றியது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதிப்பு குறைக்கப்பட்டது.கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே அரசு திட்டமிட்டு பணியாற்றியது.நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் நாளை செல்ல உள்ளனர் .கஜா புயலால் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோயை தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இயற்கை சீற்றங்கள் என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என யாராலும் கணிக்க முடியாது.மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைந்து பணியாற்றி மின்விநியோகம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிப்பார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.