கஜா புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை…!
கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் கரையைக் கடந்து சேதம் ஏற்படுத்திய கஜா புயல், அரபிக் கடல் நோக்கிச் செல்கிறது.
இதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.நேற்று முன்தினம் மாலை நாகர்கோவிலில் சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் கோட்டார், செம்மாங்குடி ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது.