சூப்பர் ஸ்டார் தெரியும் ….. புளூஸ்டார் பற்றி தெரியுமா உங்களுக்கு…!!!!!

Default Image

இந்திரா என்கிற இந்தியாவின் அணுஅயுதம் இந்திராகாந்தி கம்பீரபார்வையால் ஆள்களை மிரட்டுகின்ற பாணி அரசியல் முதிர்ச்சி,அடங்க மறுக்கும் செயல் என்று விமர்சனத்திற்கும்,புகழ்ச்சிக்கும் சொந்தர்கராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி.

Image result for indira gandhi

இந்திரா பிரியதர்ஷின் மறைந்த பிரதமர் நேருவின் ஒரே மகள்,இந்திரா ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேருவிற்கு மகளாக நவம்பர் 19, 1917ல் அலகாபாத்தில் பிறந்தார். இவர் 1942ல் ஃபெரோஸ் காந்தி என்பவரை திருமணம் செய்தார்.தந்தையின் அரசியலில் விருப்பமில்லாமல் லால் பகுதுரின் வேண்டுகோள் படி அரசியலில் நுழைந்தார் இந்திரா காந்தி.இவருடைய ஆட்சிகளத்தில் நடந்த அதிரடியில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆப்ரேசன் புளூஸ்டார்.

Related image

அது என்ன ஆப்ரேசன் புளூஸ்டார் என்று கேட்கும் இளைய தலைமுறைக்கு இந்தியாவின் வரலாற்று பக்கத்தில் இடம் பெற்ற இந்திராவின் ஆய்ரேசன் புளூஸ்டார்.பற்றிய சிறப்பு அலசல் தான் இந்தகட்டுரை.

Related image

புளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star) என்பது ஜூன் 3 மற்றும்6 நாள்களில் 1984-ல் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை ஆகும். யாரும் எதிர்பார்க்காத இந்திராவின் அரசியல் நடவடிக்கையாகும்.

Related image

இந்த புளூஸ்டார் நடவடிக்கை  அம்ரித்சரஸ் நகரில் அமைந்துள்ள பொற்கோயிலில் தஞ்சமடைந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிப்பதற்காக  அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் முழு ஆணைப்படி இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது இந்திராவின் நேரடி கண் பார்வையில் நடத்தப்பட்டது.இதில் முற்றிலுமாக பொற்கோவில் சேதபடுத்தப்பட்டது.

Image result for indira ATTACK

இந்திய வரலாற்றில் ராணுவம் நாட்டிற்குள் களமிரங்கி தாக்கிய சம்பவம் நடந்தது.எதற்கு என்று பார்த்தால் சிக்கியகள் தங்களுக்கு காலிஸ்தான் என்கிற தனிநாடு கேட்டு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அது பெரிய போராட்டமாக மாறிய நிலையில் காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன் வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் ஏராளமான ஆயுதங்களை சீக்கியக் கோவிலிலான பொற்கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

Image result for indira ATTACK

ராணுவம் அதிரடியாக பொற்கோவில் இந்திராவின் உத்தரவின் பெயரில் களமிரங்கியது.இந்நிலையில் ஏராளமான சிக்கியர்கள் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக அரசுத் தரப்பில் சுட்டு கொல்லப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையாக  ராணுவம் சார்பில் 83 ஆகவும் அதே சமயத்தில் பொதுமக்கள் தரப்பில் 492 ஆகவும் கூறப்பட்ட நிலையில் ஆனால் சாவு எண்ணிக்கை 1500 வரை இருக்குமென கூறுகின்றனர்.சிக்கீயர்களின் புனிதமாக கருதப்படும் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்தது சிக்கீயர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

Related image

இந்த ராணுவ நடவடிக்கையால் இந்தியாவிலும் பதட்ட நிலை ஏற்பட்டு,சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதல் நடைபெற்றது.மேலும் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கியர்கள் இந்திரா காந்தியின் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தனர்.

Image result for indira ATTACK

இந்திய அரசின் இந்த நடவடிகையால் ஆத்திரமைடந்த சிக்கீயர்கள் இந்திய அரசு குடியாண்மை பணி மற்றும் ராணுவத்திலும் இருந்த பல சீக்கியர் தங்களின் பணிகளைத் தூக்கி எரிந்தனர். இதற்கு வழுப்பெறும் விதமாக மேலும் சில சீக்கியர்கள் இந்திய அரசால் அளிக்கப்பட விருதுகளையும் ,பாராட்டுப் பத்திரங்களையும் இந்திய அரசிடம் திரும்பக் கொடுத்து தங்களின் உச்சக்கட்ட கோபத்தை வெளிப்படுத்தினர்.

Related image

சரியாக இந்த ஆப்ரேசன் புளூஸ்டார் ராணுவ நடவடிக்கை நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு பிறகு அதாவது 31 அக்டோபர் 1984 அன்று இந்திரா காந்தி தனது இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை ஒரு பழிவாங்கிய நிகழ்வாகவே இன்றும் பார்க்கப்படுகிறது.

Related image

மேலும் இந்த ஆப்ரேசனை துணிகரமாக முன்னெடுக்க காரணம் இந்தியாவை பிரிக்க கூடாது,மேலும் நாட்டில் இந்த தனிநாடு கோரிக்கை இந்தியாவை பாதிக்கும் என்று இந்திரா அன்று அச்சப்படாமல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு எடுத்த ராணுவ நடவடிக்கையே அவரின் இறுதி முடிவை வராலாற்றில் எழுதியது.ஆனால் இந்திய இறையாண்மையை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுத்தார் இந்திரா.

Related image

இந்திரா காந்தி தான்  கொல்லப்படுவதற்கு முதல் நாள் இரவு ஒரு அரசியல் கூட்டத்தில் பங்கேற்றார் அதில் பேசும்பொழுது இந்தியாவுக்காக என் உயிர் போனால் நான் வருத்தப்படமாட்டேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலமிக்க நாடாக்கும் என்று பெருமிதம் பொங்க  இந்திரா பேசினார். மறுநாள் தனது மெய்காப்பாளர்களால் இந்திரா காந்தியின் படுகொலைச் செய்யப்பட்டார்.இந்த ஆப்ரேசன் புளுஸ்டாரில் 5000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சீக்கிய எதிர்ப்புக் கலகங்களில் கொல்லப்பட்டனர். சீக்கிய இனத்தவரிடையே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

Related image

மேலும் சீக்கியரால் ‘பெரும் படுகொலை’ என்று பெரியதாக கருதப்படும், 1761-ல் ஆப்கானிய அகமது ஷா அப்தாலி-யின் சீக்கிய இனப் படுகொலையோடு இந்த நிகழ்வு ஒப்பிட்டு இன்றுவரை பர்க்கப்படுகிறது என்பது நிதர்சனமான ஒன்று.

Related image

இந்திரா காந்தி என்றால் தைரியம் அதிகளவு நிறைந்து காணப்படுவர் யாருக்கும் அஞ்சமால் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்.பெண்களால் இன்றும் பிரம்மித்து பார்க்கப்படுபவர்.அரசியலில் சறுக்கல்கள்,சானைகள் என அனைத்தையும் துணிச்சலோடு எதிர்கொண்டவர்.மற்ற நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக சிங்கமாக திகழ்ந்தவர் இந்திரா…வாஜ்பாயால் இந்தியாவை காக்க வந்த துர்க்கை என்று அழைக்கப்பட்டவர்.அவருடைய அரசியல் மற்றும் இந்தியாவிற்கு அவர் புரிந்த பணிகள் போற்றக்கூடிய ஒன்றாகும்.அதிரடியாக வங்கதேசத்தை மிட்டு ,பாக்.தானுக்கு பதிலடி கொடுத்து ஓடவிட்டது என்று இவருடைய அதிரடியே இவருக்கு முடிவாக அமைந்தது.இவருடைய அரசியல் வரலாற்றில் ஆப்ரேசன் புளுஸ்டார் இன்று வரையிலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டபோதிலும் இந்தியாவின் ஒற்றுமையே காத்த இந்திரா என்பது தான் நிதர்சனமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்