கரையை கடந்த கஜா…11 மணிக்கு காற்றழுத்ததாழ்வாக மாறும்…வானிலை ஆய்வு மையம்…!!
கஜா புயல் தற்போது புயலாக மாறி கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் , இரவு 12.30 மணிக்கு கஜ புயல் நாகை வேதாரண்யம் இடையே கரையை கடக்க தொடங்கிய போது தீவிர புயலாக இருந்தது.அதன் கன்பகுதி கரையை கடந்த 12.30 முதல் 2.30 மணி வரை தீவிர புயலாகவே கரையை கடந்தது.சரியாக 5.30 மணிக்கு கஜா புயல் மேற்குதிசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது.
கஜா புயல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 11 மணிக்கு காற்றழுத்ததாழ்வாக மாறும் என்று வானிலை ஆய்வு வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதனால் திருச்சி , பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com