கஜா புயல் எதிரொலி நாளை பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து…!!!
கஜா புயலைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கஜா புயலை தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.கஜா புயல்கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. இரவு 10 முதல் 11 மணி அளவில் புயலின் வேகம் அதிகரித்து நாகையில் கரையை கடக்கும் என்றும் கஜா புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.கரையை கடப்பதால் இரவு 10 மணிக்கு மேல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU