ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார்..!!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை வியட்நாம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி வியட்நாம் சென்றார். அப்போது இருநாடுகளுக்கிடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மேலும், இந்தியாவுடன் பாதுகாப்பு துறையில் ஒத்துழைத்து செயல்படுவதற்காக வியட்நாம் நாட்டுக்கு ரூ.3,250 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com