கஜா புயல் 17 கி.மீ. முதல் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது..!கரையை கடக்கும்போது கனமழை பெய்யும் ..!
கஜா புயல் 17 கி.மீ. முதல் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே. ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே. ரமேஷ் கூறுகையில், கஜா புயல் 17 கி.மீ. முதல் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. பாம்பன் – கடலூர் இடையே இன்று இரவு 8 மணி அல்லது 11 மணி அளவில் கரையை கடக்கலாம் .புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 கி.மீ. முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்க குறைந்தபட்சம் 4 மணி நேரமாகும். புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே. ரமேஷ் தெரிவித்துள்ளார்.