ஸ்டாலின், பிரதமரை பற்றி பேசும்போது நாவடக்கி பேசுவது நல்லது….! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
கஜா புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் மாநில அரசுக்கு உதவ மத்திய அரசு தயார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,கஜா புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் மாநில அரசுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது.அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமரை பற்றி பேசும்போது நாவடக்கி பேசுவது நல்லது.மேலும் சந்திரபாபு நாயுடு அமைக்கும் கூட்டணி வருகின்ற பாரளுமன்ற தேர்தலில் மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்கும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.