கஜா-வின் ஆட்டம் ஆரம்பம்…புதுச்சேரியில் கடல் சீற்றம்…சுற்றுலாபயணிகள் வெளியேற காவல்துறை அறிவுரை…!!
புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலாபயணிகள் வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கஜா புயல் தற்போது 290 கிமீ தொலைவில் சென்னைக்கு கிழக்கேயும், நாகையிலிருந்து 290 கிமீ தொலைவில் வடகிழக்கிலும், காரைக்காலுக்கு கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.அதேபோல் கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 25 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்றும் 8 மணிக்கு கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து புதுச்சேரியில் கடல் அதிக சீற்றத்துடன் இருந்தது.இதனால் சுற்றுலாப்பயணிகள் வெளியேறுமாறு புதுச்சேரி காவல்துறை சுற்றுலாபயணிகளுக்கு அறிவுறுத்துகிறது.புதுச்சேரியில் கடல் சீற்றம் , காற்றில் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் இங்கே கடலின் சீற்றத்தை காண மக்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.புதுச்சேரி காவல்துறையினர் சுற்றுலாப்பயணிகளையும் , பொதுமக்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்துகின்றனர்.இதனால் கஜா புயலின் பரபரப்பு அதிகரித்துள்ளது.
dinasuvadu.com