என் படம் ஓடாது என ஓப்பனாக தெரிவித்த சிம்பு படஇயக்குனர்!!!
சிம்பு கடைசியாக நடித்து சிம்பு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு படுதோல்வி அடைந்த திரைப்படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது, சிம்பு பட ரீலீஸ் சமயத்தில் படத்தைப்பற்றி அஹோ ஓஹோ என அவர் கொடுத்த பில்டப் தான். அதனாலேயே இப்படம் ஊத்திகொண்டது.
இப்படம் தோல்வியடையும் என எனக்கு பட ரிலீசுக்கு முன்பே தெரியும் என ஒரு இயக்குனர் கூறியுள்ளார். அந்த இயக்குனர் வேறு யாருமில்லை ‘AAA’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். மேலும் இவர், இப்படத்தை எடுத்து தான் நிறைய கற்றுக்கொண்டதாகவும் அதலால் இனி அவ்வாறு செய்யமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.