விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை…இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்…!!
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 3,423 கிலோ எடை கொண்ட, ஜிசாட் 29 செயற்கைகோளுடன், ஜிஎஸ்எல்வி மார்க் -3 டி2 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த இந்த செயற்கை கோள், பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ., தொலைவில் விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது:
சந்திராயன் – 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும். செயற்கைக்கோள்களை ஏவுவதில் இந்தியா பெரும் முன்னேற்றம் பெற்றிருப்பதை இது உறுதி செய்கிறது.ஜிஎஸ்எல்வி மார்க் -3 டி2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த இந்த செயற்கை கோள், பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ., தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்.ஜம்மு – காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியா பகுதிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்த இந்த செயற்கைகோள் உதவும். 2020-ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com