ஹாலே……காற்றின் மொழியை முடித்து…..அடுத்து படத்துக்கு பூஜை…..ஜோ.வின் அடுத்த பட அப்பேட் இதோ..!!!

Default Image

காற்றின் மொழி படத்தை முடித்து விட்டு அடுத்து நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டுள்ளது.

Image result for காற்றின் மொழி பாடல்

நடிகை ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காற்றின் மொழி’படம் பெண்களை மையப்படுத்திய படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார்.அப்படி 36 வயதினிலே,மகளிர் மட்டும்,நாச்சியார் என்று கலக்கி தற்போது காற்றின் மொழி படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ளார் படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜோவின் அடுத்த படத்தின் பூஜையை நேற்று போட்டிருக்கிறார்.
இவர் நடிக்கும் இந்த படத்திற்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிற்வனம் 21-வது படமாக தயாரிக்கிறது. இதற்கான பூஜை படக்குழுவால் நேற்று நடத்தப்பட்டது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த வார இறுதியில் தொடங்க இருக்கிறது. படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார்.
Related image
இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,நடிகை  பூர்ணிமா பாக்யராஜ், கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.படத்திற்கு ஸீன் ரோல்டன் இசையமைகிறார் மேலும் இப்படத்திற்கு கோகுல் பென்னி ஒளிப்பதிவு செய்கிறார்.
Image result for காற்றின் மொழி ஜோதிகா
காற்றின்மொழி படம் வரும் வாரத்தில் வெளியாக உள்ளது.ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்