பாம்பை கண்டு படையே நடுங்கும்…!! என்பதால் பாம்பு பலசாலியல்ல…!! பாஜக விஷம் படமெடுத்து சீறிய திருமா..!!

Default Image

#எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினி கூறியது பெரும் பரபரப்பையும் , விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் எழு பேர் விடுதலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.அப்போது அவர் எந்த ஏழு பேர்..,எனக்கு தெரியாது என்று கூறியனார்.

Image result for RAJINI MODI

இதனால் பெரும் சர்ச்சையாக உருமாறியது அவருடைய கருத்து இதனால் பேட்டி அளித்த அடுத்த நாளே தன் கருத்து குறித்து விளக்கமளித்த ரஜினி ராஜீவ் கொலை வழக்கில் கைதான அந்த ஏழுபேரை தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை இந்த ரஜினி என்று தெரிவித்தோடு மட்டுமல்லாமல் செய்தியாளார்களின் கேள்வி தனக்கு புரியவில்லை ஏழுபேர் விடுதலை என்றால் எந்த ஏழு பேர் என்று தானே கேட்பார்கள் என்று கூறினார்.

Image result for RAJINI

மேலும் பேசிய அவர் ஆபத்தான கட்சியா பாஜக என்ற கேட்விக்கும் பதிலாளித்தார்.மேலும் பேசிய அவர் பாஜகவிற்கு எதிராக உருவாகி கொண்டிருக்கும் மெகா கூட்டணியை  பற்றி கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்து பேசிய ரஜினி பத்து பேர் சேர்ந்த ஒருத்தர எதிர்த்த யார் பலசாலி நீங்களே சொல்லுங்க என்று மோடி பலசாலி என்று சூசகமாக தெரிவித்தாரா..?என்று அரசியல் நோக்கர்கள் நோக்குகிறார்கள்.

Related image

இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில் பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும் அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும் விஷம்கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம்என்று சீறியுள்ளார் திருமாவளவன்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்