மோடி வாழ்த்து : இன்றைய ஸ்பெஸல் நாள்???
இந்தியாவில் வருடம்தோறும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அச்சு ஊடகங்களை நெறிப்படுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் இந்தியா கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அதன் காரணமாக இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.
அதன் காரணமாக பாரத பிரதமர் மோடி கூறுகையில் ‘சுதந்திரமான ஊடகம் துடிப்பான ஜனநாயகத்தின் மூலைக்கல்லாக விளங்குகிறது. அனைத்து வடிவங்களிலும் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். 125 கோடி இந்தியர்களின் திறமைகள், வலிமைகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை மேலும் வெளிப்படுத்தும் வகையில் ஊடகங்களை பயன்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.