கீழே கிடந்த பொம்மை கார்…வெடித்து சிறுமி மற்றும் தாயார் காயம்…!!
அசாமில் சாலையில் கிடந்த பொம்மை காரை எடுத்து வீட்டில் வைத்து விளையாடியபொழுது வெடித்ததில் சிறுமி மற்றும் தாயார் காயமடைந்தனர்.
அசாமில் மணிபுரி பஸ்தி பகுதியில் சாலையில் பொம்மை கார் ஒன்று பையுடன் கிடந்துள்ளது. இதனை ஒருவர் கவனித்துள்ளார். அதன்பின்னர் அருகிலிருந்த வீட்டில் வசித்த ஒரு சிறுமி அந்த பொம்மை காரை எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளாள்.
அந்த காரை ஓட்ட முயற்சிக்க அது வெடித்துள்ளது. இதில் சிறுமி மற்றும் அருகிலிருந்த சிறுமியின் தாயார் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் 2 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சிறுமியின் முகம், உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. 2 விரல்களும் துண்டிக்கப்பட்டு உள்ளன. தாயாரின் கால்களிலும் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் கிடந்த பொம்மை கார் வெடித்தது பற்றியும், அதனை யார் விட்டு சென்றது என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த அக்டோபர் 18ந்தேதி மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் நகரில் இயந்திரம் சரிசெய்யும் பணிமனை ஒன்றில் கிடந்த பொம்மை காரை எடுத்து விளையாடியதில் அது வெடித்து 14 வயது சிறுவன் காயமடைந்து உள்ளான்.
dinasuvadu.com