கோப்பை கனவிற்கிடையே கேட்பனின் செயல்….கவுருக்கு குவியும் பாராட்டு கவர்கள்…!!!

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஐசிசி மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிரணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளார் இவரது தலைமையிலான இந்திய அணி பங்காளி பாகிஸ்தானை நேற்று ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இதற்கு முன் கடந்த 10-ம் தேதி நியூசிலாந்தை இந்தியா வென்றது. இந்தப் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 பந்துகளில் சதம் விளாசி சர்வதேச அளவில் சாதனை படைத்தார்.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான நேற்றைய போட்டியின்போது ஹர்மன்ப்ரீத் கவுரின் மனிதபிமான செயல் பலரது பாராட்டுகளை பெற்று மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.ஐ.சி.சி. போட்டிகளில் வீரர்கள் சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து போட்டியிடும் அணி தங்களது நாட்டு தேசிய கீதம் இசைத்து முடிக்கப்படும் வரை அந்த சிறுவ-சிறுமிகள் உடன் நிற்பது வழக்கம்.
அப்படி நேற்று முன் தினம் நடந்த போட்டியில் போட்டி தொடங்கும் முன்னர் தங்கள் நாட்டு தேசியகீதம் பாட இந்திய அணி வீரர்கனைகளும், பாகிஸ்தான் அணி வீரர்கனைளும் மைதானத்தில் சிறுவர், சிறுமிகளுடன் கூடியிருந்தனர். இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது இதில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முன் நின்றிருந்த குழந்தை மயக்கநிலையை அடைந்துள்ளது இதனைமுன்னே சுதாரித்து கொண்ட கவுர் தேசியகீதம் இசைக்கப்பட்டு முடியும் வரை அவரை தன் கையால் வாரி அனைத்து கொண்டார்.மேலும் தன் நின்றிருந்த சிறுமி பலவீனமாக இருப்பதை கவனித்து கொண்டு தேசிய கீதம் முடியும் வரை காத்துகொண்டிருந்தார் கவுர்.
தேசிய கீதம் முடிந்த அடுத்த நொடியில் கவுர் அச்சிறுமியைத் டபக்கென்று தூக்கிக்கொண்டு வேகமாக நடந்து அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்தார்.பின் தனது அணியோடு இணைந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் மனிதாபிமானத்தை கண்ட பலரும் அவரை சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
https://twitter.com/NaaginDance/status/1061651193766662144
DINASUVADU
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024