இந்தியா உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடு…!
குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தியா உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக விளங்குகிறது.இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள்தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.