கஜா புயலால் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது : வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் உருவாகியுள்ள நிலையில், இந்த புயலால் 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி, ஆகிய மாவட்டங்களில் காற்று வீசும் என தெரிவித்துள்ளனர். மேலும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 90கி.மீ வேகத்தில் ஆற்று வீசப்படும் என கூறப்பட்டுள்ளது.