கேக் வெட்டி கொண்டாடிய சர்க்கார் குழுவினர்…!! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்….!!!!
சர்கார் படம் வரும் தீபாவளியன்று வெளியாகி, 2 நாட்களிலேயே சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் பல பிரச்சனைகள் உருவாகி, படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டு இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 2 நாட்களில் 100 கோடி வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கேக்கில் மிக்சி, கிரைண்டர் போன்ற குறியீடுகள் இடம் பெற்றிருந்தது. இந்த புகைப்படங்களை ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்திலும், இன்ஸ்ட்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பேசப்பட்டு வருகிறது.
source : tamil.cinebar.in