தமிழகத்தில் அடுத்து ஒரு புதிய கட்சி…..!!!
திரைப்பட இயக்குனர் கவுதமன் சென்னையில் நேற்று பேட்டியளிக்கையில், ” தமிழகத்தில் இந்தியை திணித்து வரும் பாஜாகாவை எதிர்க்கவே கட்சி துவங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ் இனத்தை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறோம். ரஜினி எங்கு கட்சி ஆரம்பித்து போட்டியிடுகிறாரோ, நாங்களும் அங்குக் கட்சி ஆரம்பித்து அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என்றும், வரும் தாய் பொங்கலுக்கு பிறகு மாநாடு நடத்தி, கட்சியின் கொள்கை, பெயர், கோடி அறிவிக்கப்படும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்தார்.